விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் 3-வது சுற்றுக்கு ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா, செர்பிய வீராங்கனை இவானோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தகுதி பெற்றனர்.
உக்ரைன் வீராங்கனை பொன்டாரென்கோவை 6- 2, 6- 3 என்று வீழ்த்தி குஸ்னெட்சோவா எளிதில் 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
முதல் தரவரிசையில் உள்ள செர்பிய வீராங்கனை ஆனா இவானோவிச் பிரான்ஸைச் சேர்ந்த தரவரிசையில் இல்லாத நதேலி டெக்கியை 7- 6, 6- 7, 10- 8 என்று போராடி வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் 8-ம் தரவரிசையில் உள்ள ரஷ்யாவின் சக்வெடாட்சே ருமேனியாவின் கேல்லோவிட்ஸ் என்பவரை நேர் செட்களில் வீழ்த்தி 3-வது சுற்றுக்க்கு தகுதி பெற்றனர்.
6-ம் தரவரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் போலந்தின் உருசுலா ராத்வான்ஸ்காவை 6- 4, 6- 4 என்று வீழ்த்தினார்.
தரவரிசை 14-ல் உள்ள மற்றொரு போலந்து வீராங்கனை அக்னிஎஸ்கா ராத்வான்ஸ்கா 6- 1, 6- 3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை டோமகோவ்ஸ்காவை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
பிரான்சின் அமேலி மவுரிஸ்மோ, மரியோன் பர்டோலி ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் எலினா டீமென்டீவா இத்தாலியின் கேமரின் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
|