முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வில்வித்தை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்!  Search similar articles
பிரான்சில் நடைபெறும் மெடெக்சன் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் 3 வீரர்கள் கொண்ட இந்திய அணி 1944 புள்ளிகளுடன் 8-வது இடத்திற்கே வர முடிந்தது.

தனி நபர் போட்டிகளில் இந்திய வீரர் ஜெயந்தா தாலுக்தார் மட்டுமே இரண்டு 70 மீ‌ட்ட‌ர் அம்பு விடுதல் சுற்றுகளில் 663 புள்ளிகள் எடுத்து 6-வது இடம் வந்தார்.

தேசிய சாம்பியன் ராகுல் பேனர்ஜி 654 புள்ளிகளைப் பெற்று 18-வது இடத்திற்கும், வைகோம் ரஞ்சன் சிங் 643 புள்ளிகள் பெற்று 34வது இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.

தனி நபர் ஒலிம்பிக் நாக்-அவுட் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் பிரியன்க் தியாகி ஒட்டுமொத்தமாக 627 புள்ளிகளைப் பெற்று 70-வது இடத்தை மட்டுமே பெற முடிந்தது. சாம்பியன்ஷிப் சுற்றுக்கு தகுதி பெற 64 இடங்களுக்குள் வருவது கட்டாயமாகும்.

தற்போது இந்தப் போட்டித் தொடரிலிருந்து ஒருவரும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறவில்லை, எனினும் செப்டம்பர் 27ஆம் தேதி லாசேனில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதியில் இந்திய வீரர்களான ராகுல் பேனரி, தாலுக்தார் ஆகியோர் நுழைய வாய்ப்பிருக்கிறது.
மேலும்
பரபரப்பான ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி!
ஜெர்மனி-துருக்கி இன்று பலப்பரிட்சை!
போபண்ணா- குரேஷி இணை முன்னேற்றம்!
ஷரபோவா, ஜான்கோவிச் முன்னேற்றம்!
2-வது சுற்றில் நாடல், முர்ரே, ரோடிக்!
டாம்மி ஹாஸ், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி!