முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பரபரப்பான ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி!  Search similar articles
யூரோ 2008 கால்பந்து முதல் அரையிறுதியில் துருக்கியை 3- 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

வெற்றிக்கான 3-வது கோலை ஜெர்மனி வீரர் பிலிப் லாம் கடைசி நேரத்தில் அடித்தார்.

முன்னதாக பரபரப்பாக துவங்கிய இந்த ஆட்டத்தில் 22-வது நிமிடத்தில் துருக்கி வீரர் உகுர் போரல் முதல் கோலை அடித்தார்.

ஆனால் அதன் களிப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. உடனடியாக ஜெர்ம‌ன் ஆடிய தாக்குதல் ஆட்டத்தில் பாஸ்டியன் ஷ்வெய்ன்ச்டெய்ஜர் அபாரமான கோலை அடித்து சமன் செய்தார். இடைவேளை வரை இரு அணிகளும் 1- 1 என்ற சம நிலையில் இருந்தது.

ஆனால் இடைவேளை வரை துருக்கியின் ஆதிக்கம் இருந்தது. 6 முறை கோலை நோக்கி துருக்கி வீரர்கள் ஷாட்களை அடிக்க ஜெர்மனி அந்த ஒரு கோல் தவிர மற்றபடி துருக்கியை பெரிதாக அச்சுறுத்தவில்லை.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு செல்லும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் 79வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் லாம் தூக்கி அடித்த ஷாட்டை பிடிக்க துருக்கி கோல் கீப்பர் ரஸ்டு முய‌ன்றா‌ர். ஆனால் ஜெர்மனி வீரர் க்ளொஸ் அதற்குள் பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

ஆனால் துருக்கி தளர்ந்து விடவில்லை, துருக்கி வீரர் சாப்ரி சரியோக்லு தாழ்வாக ஒரு ஷாட்டை குறுக்காக அடித்தார், அதனை செமி கோலாக மாற்றினார். இரு அணிகளும் மீண்டும் சமம்.

ஆனால் ஜெர்மனியும் விட்டுவிடுவதாயில்லை, இறுதி கட்டத்தில் ஆடிய ஒரு அதிவேக ஆட்டம் ஜெர்மனிக்கு கைகொடுத்தது. வாய்ப்பை பயன்படுத்தி லாம் வெற்றிக்கான கோலை அடித்தார்.
மேலும்
ஜெர்மனி-துருக்கி இன்று பலப்பரிட்சை!
போபண்ணா- குரேஷி இணை முன்னேற்றம்!
ஷரபோவா, ஜான்கோவிச் முன்னேற்றம்!
2-வது சுற்றில் நாடல், முர்ரே, ரோடிக்!
டாம்மி ஹாஸ், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி!
விம்பிள்டன்: சானியா வெற்றி!