விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் சுற்றில் இந்திய- பாக். இணையான போபண்ணா-குரேஷி இணை முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆடவர் இரட்டையர் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள போலந்து இணையான மரியூஸ் ஃபிர்ஸ்டன்பர்க்- மர்சின் மட்கோவ்ஸ்கி இணையை போபண்ணா- குரேஷி இணையை 6- 3, 7- 5, 6- 4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
முன்னதாக மற்றொரு இந்திய வீரர் உள்ள இணையான பயஸ்- லூயி இணை பிரிட்டன் இணையை கடுமையாக போராடி 5 செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றில் அமெரிக்க- ஆஸ்ட்ரேலிய இணையான புடொரேக்- ஃபிஷர் இணையை சந்திக்கின்றனர்.
அதிவேக டென்னிஸை ஆடிய போபண்ணா- குரேஷி இணை சுமார் 2 மணி நேரத்தில் தனது வெற்றியை ஈட்டியுள்ளது.
|