முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஷரபோவா, ஜான்கோவிச் முன்னேற்றம்!  Search similar articles
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான ரஷ்யாவின் ஷரபோவா, செர்பியாவின் ஜான்கோவிச், அமெரிக்காவின் டேவன்போர்ட் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பிரான்ஸ் வீராங்கனை ஸ்டெபானி ஃபோரெட் என்பவரை 3-ம் தரவரிசையில் உள்ள ஷரபோவா 6- 1, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

உக்ரேனிய வீராங்கனை ஓல்கா சாவ்சுக் என்பவரை 2-ம் தரவரிசை செர்பிய வீராங்கனை ஜெலெனா ஜான்கோவிச் 6- 3, 6- 2 என்று வெற்றி பெற்றார்.

நீண்ட நாட்கள் கழித்து டென்னிஸிற்கு திரும்பிய 25-ம் தரவரிசை அமெரிக்க வீராங்கனை டேவன்போர்ட் ரெனடா வோரசோவாவை 6- 3, 5- 7, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இத்தாலி வீராங்கனை ஷியாவோன், ரஷ்யாவின் ஸ்வொனரேவா, ஸ்லோவேகிய வீராங்கனை ஹண்டுசோவா, ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மேலும்
2-வது சுற்றில் நாடல், முர்ரே, ரோடிக்!
டாம்மி ஹாஸ், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி!
விம்பிள்டன்: சானியா வெற்றி!
இத்தாலி கால்பந்து பயிற்சியாளர் ராஜினாமா செய்ய மறுப்பு!
தடகளம்: இந்தியா அபாரம்!
2-வது சுற்றில் இவானோவிச், செரீனா!