முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
2-வது சுற்றில் நாடல், முர்ரே, ரோடிக்!  Search similar articles
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடல், பிரிட்டன் வீரர் முர்ரே, அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஆனால் 4-ம் தரவரிசையில் உள்ள ரஷ்ய வீரர் நிகோலே டேவிடென்கோ ஜெர்மனி வீரர் பெஞ்சமின் பெக்கரிடம் 4- 6, 4- 6, 4- 6 என்ற செட்களில் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

ஆடவர் இரட்டையர் தரவரிசையில் பயஸ்-லூயி இணை, பிரிட்டன் இணையான ஆக்லண்ட்-டெல்கேடோ இணையை 4- 6, 6- 0, 6- 3, 4- 6, 6- 3 என்ற செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜெர்மனி வீரர் ஆந்த்ரியாஸ் பெக் என்பவரை ரஃபேல் நாடல் 6- 4, 6- 4, 7- 6 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

12-வது தரவரிசையில் உள்ள பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே பிரான்ஸின் ஃபாப்ரீஸ் சான்டாரோவை 6- 3, 6- 4, 7- 6 என்ற செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சமீப காலங்களில் தடுமாறி வரும் 6-வது தரவரிசை அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் அர்ஜென்டீனாவின் ஷ்வான்க்கை சுலபமாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

9-ம் தரவரிசையில் உள்ள அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக், அர்ஜென்டீனா வீரர் அகஸ்டின் கல்லேரி, 16-ம் தரவரிசையில் உள்ள செக் வீரர் ஸ்டெபானெக், 19-ம் தரவரிசையில் உள்ள ஸ்பெயின் வீரர் அல்மார்கோ, பிரான்சின் சிமோன் ஆகிய தரவரிசையில் உள்ள வீரர்களும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மேலும்
டாம்மி ஹாஸ், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி!
விம்பிள்டன்: சானியா வெற்றி!
இத்தாலி கால்பந்து பயிற்சியாளர் ராஜினாமா செய்ய மறுப்பு!
தடகளம்: இந்தியா அபாரம்!
2-வது சுற்றில் இவானோவிச், செரீனா!
விம்பிள்டன்: நட்சத்திர வீரர்கள் வெற்றி!