விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்றில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் ஆடவர் பிரிவு முதல் சுற்றில், அபாரமாக ஆடி முதல் செட்டை வென்ற அர்ஜெண்டினா வீரர் கில்லர்மோ கானாஸை சிறப்பாக ஆடி அடுத்த மூன்று செட்களை வென்று தோற்கடித்தார் ஜெர்மனியின் டாம்மி ஹாஸ்.
இன்று மாலை நடைபெற்ற மகளிர் பிரிவு முதல் சுற்றில், பிரிட்டனின் நவ்மி காவாடேயை 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்களில் வீனஸ் வென்றார்.
ஜப்பானின் ஆய் சுஜியாமா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் யானினா விக்மேயரை தோற்கடித்து இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினார்.
ஆடவர் பிரிவு முதல் சுற்றில் ஃபிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் காஸ்கி (8) 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்க வீரர் மார்டி ஃபிஸ்-ஐ வென்றார்.
நிக்கோலாஸ் கீஃபர் (27), ஜார்க்கோ நீமினென் (24), செபாஸ்டியன் கிராஸ்ஜான், டாம்மி ராப்ரிடோ (23) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
|