விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் நாள் ஆட்டத்தில் 1-ம் தரவரிசையில் உள்ள செர்பிய வீராங்கனை இவானோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இவானொவிச் ரோஸானா டி லோ ரியோ என்ற வீராங்கனையை 6- 1, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 6-ம் தரவரிசையில் உள்ள செரீனா வில்லிஸ் ஈஸ்டோனியாவின் கனேபியை 7- 5, 6- 3 என்று எளிதில் வென்றார்.
போலந்தின் வளரும் நட்சத்திரம் ராத்வான்ஸ்கா செக் வீராங்கனை பெனெசோவாவை 6- 3, 6- 0 என்று ஊதித் தள்ளினார். 4-ம் தரவரிசையில் உள்ள ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா பிரான்ஸின் மேதில்டு ஜொஹான்சன் என்பவரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
29-ம் தரவரிசையில் உள்ள அமேலி மௌரிஸ்மோ அமெரிக்க வீராங்கனை ஹார்க்ளிரோட் என்பவரை 6- 4, 6- 3 என்று வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
8-ம் தரவரிசை வழங்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சக்வெடாட்சே கனடா வீராங்கனை டூபோ என்பவரை 3 செட்களில் போராடி வெற்றி பெற்றார்.
28-ம் தரவரிசையில் உள்ள அலோனா போன்டாரென்கோ 6- 3, 6- 7, 6- 4 என்று பிரிட்டன் வீராங்கனை மெலானி சௌத் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
|