விம்பிள்டன் டென்னிஸ் தயாரிப்பு தொடரில் சானியா மிர்சா மோசமான தோல்வியைத் தழுவினாலும் உலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 32-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
விம்பிள்டன் தொடருக்கு முன்னோட்டம் என்று கருதப்படும் வெபர் மற்றும் ஆர்டினா டென்னிஸ் தொடர்களில் சானியா மிர்சா 2-வது சுற்றிலேயே தோல்வி அடைந்தார். இருப்பினும் 867 புள்ளிகளுடன் ஒற்றையர் தரவரிசையில் 32-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
ஆனால் இரட்டையர் உலக தரவரிசையில் சானியா மிர்சா 1,745 புள்ளிகளுடன் 19-வது இடத்தை தக்க வைத்துள்ளார்.
இன்று துவங்கும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரிலும் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 32-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
விம்பிள்டன் முதல் சுற்றில் கொலம்பிய வீராங்கனை கேடலினோ காஸ்டானோவை அவர் சந்திக்கிறார்.
ஆடவர் இரட்டையர் தரவரிசையில் மகேஷ் பூபதி 13-வது இடத்திலும், பயஸ் 23வது இடத்திலும் மாறாமல் உள்ளனர்.
|