முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
போர்ச்சுக்கலை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதியில்!  Search similar articles
யூரோ 2008 கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில் போர்ச்சுக்கல் அணியை ஜெர்மனி 3- 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை‌யிறு‌தி‌க்கு செ‌ன்றது.

ரசிகர்களின் கண்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோவைச் சுற்றிச் சுழல, நேற்றைய ஆட்டமோ ஜெர்மனி வீரர் பாஸ்டியான் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜரின் அபாரத்திறமையை வெளிப்படுத்தியது.

தானே ஒரு கோலை அடித்த ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், பிறகு மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும், கேப்டன் பால்லாக் ஆகியோர் இரண்டு கோல்களை அடிக்க வியூகம் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே ஜெர்மனி அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. தாமஸ் கிட்ஸில்பெர்ஜர் அடித்த ஷாட்டை முதலில் போர்ச்சுக்கல் வீரர் டீகோ தடுத்தார். ஆனால் அது அவரது காலில் பட்டு திரும்பி வந்தது, அதனை மீண்டும் கோலுக்குள் அடிக்க முயன்றார். ஆனால் கோலாக அமையவில்லை.

ஆட்டத்தின் நடுவே போர்ச்சுக்கல் வீரர் டீகோ மற்றும் பீப் அபாரமாக பந்தை கொண்டு சென்றனர். அந்த பாஸ் வலது புறத்தில் இருந்த போர்ச்சுக்கல் வீரர் சிமாவோ சப்ரோஸாவிடம் சென்றது அவர் அடித்தார் ஆனால் தடுக்கப்பட்டது.

22-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் ஸ்ட்ரைக்கர் பொடோல்ஸ்கி இடது புறத்திலிருந்து ஒரு தாழ்வான ஷாட்டை அடித்தார். அதனை ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் அற்புதமாக நிறுட்தி கோல் போஸ்ட் அருகே நிறுத்தினார்.

இடைவேளைக்கு சற்று முன் ஜெர்மனியின் 1 கோல் முன்னிலையை சமன் செய்ய ரொனால்டோ தனிப்பட்ட திறமையை பயன்படுத்‌தினார். ஆனால் அந்த முயற்சியும் கோலாக மாறவில்லை.

ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் டீகோ அடித்த கார்னர் ஷாட்டை எடுத்த போர்ச்சுக்கல் வீரர் தலையால் முட்டியபோது கோல் போஸ்டிற்கு மேல் சென்றது. வாய்ப்பு மீண்டும் பறிபோனது.

மைக்கேல் பால்லக் ஜெர்மனியின் வெற்றி கோலான 3-வது கோலை அடித்தார். அதன் பிறகு 85-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி 2-வது கோலை அடித்தது.

ஆனால் அதன் பிறகு ஜெர்மனி தடுப்பு உத்திகளை இறுக்கியது. போர்ச்சுக்கல் வெளியேறியது.

இன்றைய காலிறுதி ஆட்டத்தில் குரேஷியாவும் துருக்கியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியை ஜெர்மனி அரையிறுதியில் சந்திக்கும்.
மேலும்
போர்ச்சுக்கலை சமாளிக்குமா ஜெர்மனி! இன்று முதல் காலிறுதி!
காமன்வெல்த் கராத்தே: இந்தியாவிற்கு 7 பதக்கங்கள்!
அரையிறுதியில் பயஸ்- பூபதி!
தடகளம் : ஜே.ஜே. ஷோபா ஒலிம்பிக் தகுதி!
ஸ்வீடனை வீழ்த்தி ரஷ்யா காலிறுதியில்!
சானியா போபண்ணா தோல்வி!