முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தடகளம் : ஜே.ஜே. ஷோபா ஒலிம்பிக் தகுதி!  Search similar articles
மதுரையில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையேயான 48-வது தேசிய தடகள போட்டிகளில் ஹெப்டத்லான் பிரிவில் ஜே.ஜே ஷோபா வெற்றிபெற்று, பீஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற தர நிலையில் 'ஏ' என்று குறிக்கப்படும் 6000 புள்ளிகளைப் பெறவேண்டும். ஆனால் ஷோபா 6,043 புள்ளிகளைப் பெற்று முதலிடம் வந்ததோடு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை புரிந்தார்.

ஹெப்டத்லான் பிரிவில், குறிப்பாக 800 மீ‌‌ட்ட‌ர் தடகள ஓட்டத்தில் அபாரமான திறனை வெளிப்படுத்திய மற்றொரு வீராங்கனை சுஸ்மிதா சிங்கா ராய் 5,975 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் வந்துள்ளார்.

இவர் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற வேண்டுமென்றால் பெங்களூருவில் ஜூலை 16ஆம் தேதி நடைபெறும் தேசிய தடகளப் போட்டிகளில் 6000 புள்ளிகளை எடுக்கவேண்டும்.

ஹெப்டத்லான் பிரிவில் ஜார்கண்டைச் சேர்ந்த பிரமிளா ஐயப்பா என்ற வீராங்கனை 4969 புள்ளிகளுடன் 3-வது இடம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
ஸ்வீடனை வீழ்த்தி ரஷ்யா காலிறுதியில்!
சானியா போபண்ணா தோல்வி!
துப்பாகி சுடுதல்: ரொஞ்சன் சோதி தங்கம் வென்றார்!
விம்பிள்டன் தகுதிச் சுற்றில் பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி!
வட்டு எறிதல்: ஹர்வந்த் கௌர் ஒலிம்பிக்கிற்கு தகுதி!
நடுவர் தீர்ப்பை எதிர்த்து துர்சுனோவ் போர்க்கொடி!