முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்வீடனை வீழ்த்தி ரஷ்யா காலிறுதியில்!  Search similar articles
யூரோ 2008 கா‌ல்பந்து பிரிவு 'டி' போட்டியில் ஸ்வீடன் அணியை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்யா அதிர்ச்சி வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்பிரிவின் மற்றொரு போட்டியில் கிரீஸ் அணியை ஸ்பெயின் அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 9 புள்ளிகளுடன் பிரிவு 'டி' -யில் முதலிடம் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ரஷ்ய அணியுடன் மோதும்போது ஸ்வீடன் அணிக்கு காலிறுதிக்கு தகுதி பெற தேவை ஒரே ஒரு புள்ளிதான், ஆனால் ரஷ்யாவின் ஆட்டம் நேற்று அதனை ஸ்வீடனுக்கு மறுத்தது.

ரஷ்ய வீரர் பாவ்லியூசென்கோ முதல் கோலை அடிக்க, ஆந்த்ரீ அர்ஷவின் வெற்றிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.

இதே போன்ற ஒரு தாக்குதல் ஆட்டத்தில்தான் இங்கிலாந்தின் யூரோ 2008 கனவை ரஷ்யா தகர்த்தது.

இன்று ஸ்வீடனின் கனவை தகர்த்துள்ளது. முதல் கோலுக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அர்ஷவின். நேற்று அவரது ஆட்டத்தையும் பந்தை எடுத்துச்செல்லும் கோணத்தையும் அவரது பாஸ்களையும் ஸ்வீடனால் கணிக்க முடியவில்லை. ஸ்வீடன் பக்கம் ஓரிரு முறை அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

ஹென்ரிக் லார்சன் தலையால் முட்டிய பந்து ஒன்று கோலுக்குள் செல்லாமல் போஸ்டை தாக்கியது.

வெற்றிகான கோல் 50-வது நிமிடத்தில் விழுந்தது. அப்போதும் தடுப்பு உத்தியிலிருந்து வினாடிகளில் தாக்குதல் ஆட்டத்‌தி‌ற்கு மா‌றியது ரஷ்யா. அபாரமான பாஸ்களின் மூலம் ஸ்வீடன் கோல் பகுதிக்குள் எடுத்து வந்து ஸிர்கோவ் அடித்த ஷாட்டை சறுக்கி வந்து அர்ஷவின் கோலாக மாற்றினார். ஸ்வீடன் ரசிகர்களைப் பார்த்து அமைதியாக இருக்குமாறு செய்கை செய்தார்.

ஒரு புள்ளி எடுத்தால் போதும் என்று நினைத்திருந்த ஸ்வீடன் இந்த தோல்வியால் அதிர்ச்சியடைந்தது.
மேலும்
சானியா போபண்ணா தோல்வி!
துப்பாகி சுடுதல்: ரொஞ்சன் சோதி தங்கம் வென்றார்!
விம்பிள்டன் தகுதிச் சுற்றில் பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி!
வட்டு எறிதல்: ஹர்வந்த் கௌர் ஒலிம்பிக்கிற்கு தகுதி!
நடுவர் தீர்ப்பை எதிர்த்து துர்சுனோவ் போர்க்கொடி!
நாட்டிங்காம் டென்னிஸ்: ஸ்டெஃபானெக் அடுத்த சுற்றில்!