முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
யூரோ : ருமேனியாவின் கனவை தகர்த்தது ஹாலந்து!  Search similar articles
யூரோ 2008 பிரிவு 'சி' மற்றொரு லீக் ஆட்டத்தில் ருமேனியா அணியை ஹாலந்து 2- 0 என்று வீழ்த்தி ருமேனியாவின் காலிறுதிக் கனவை தகர்த்தது.

இந்த போட்டியில் வென்றிருந்தால் ருமேனியா காலிறுதிக்கு சென்றிருக்கும். ஆனால் வெற்றி பெற்ற இத்தாலி அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

பயிற்சியாளர் வான் பாஸ்டன் தலைமையில் ஹாலந்து அணி தொழில் பூர்வமான, ஆக்ரோஷமான அதிரடி கால்பந்தாட்டத்தை இந்த தொடர் முழுதும் வெளிப்படுத்தி வருகிறது. ருமேனியாவை வீழ்த்திய முறையும் அதற்கு விதி விலக்கல்ல.

பிரான்ஸை 4- 1 என்று வீழ்த்திய அணியிலிருந்து 9 வீரர்களை இந்தப் போட்டியில் வான் பாஸ்டன் களமிறக்கவில்லை. முற்றிலும் புதிய வீரர்களை களமிறக்கினார். ஆனாலும் ஆட்டத்தில் மாற்றமில்லை.

இடைவேளைக்கு பிறகு கிளாஸ் ஜான் ஹன்ட்லார் மற்றும் ராபின் வான் பெர்சி ஆகியோர் ஹாலந்து அணிக்காக கோல்களை அடித்தனர்.

இடைவேளைக்கு முன் ருமேனிய அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ருமேனிய வீரர் பால் கோட்ரியா அதனை கோலுக்கு மேல் அடித்தார். அதன் பிறகு வான் பெர்சி அபாரமான ஒரு ஆட்டத்தில் கோலை நோக்கி ஒரு ஷாட்டை அடித்தார். ஆனால் ருமேனிய கோல் கீப்பர் லொபோன்ட் விழுந்து பிடித்தார்.

மற்ற படி பந்து முழுதும் ருமேனிய கோல் பகுதியிலேயே இருந்தது. ஹாலந்து வெற்றி பெற்றது.
மேலும்
பிரான்சை வீழ்த்தி இத்தாலி காலிறுதியில்!
ஆசிய ஜூனியர் மல்யுத்தம் அணி அறிவிப்பு!
விம்பிள்டன் டென்னிஸ் - மோயா விலகல்!
ஆர்டினா ஓபன்: சானியா, போபண்ணா முன்னேற்றம்!
குரேஷியா, ஜெர்மனி அணிகள் காலிறுதியில்!
தரவரிசையில் சானியா இடம் தக்கவைப்பு!