முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பரபரப்பன ஆட்டத்தில் இத்தாலி-ருமேனியா டிரா!  Search similar articles
யூரோ 2008 கால்பந்து தொடரின் சி பிரிவு ஆட்டத்தில் இத்தாலியும், ருமேனியாவும் ஆடிய விறுவிறுப்பான ஆட்டம் 1- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. 81-வது நிமிடத்தில் ருமேனியாவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை இத்தாலி கோல் கீப்பர் பஃபான் அபாரமாக தடுத்து விட ஆட்டம் டிரா ஆனது.

இத்தாலி அணியின் இந்த நிலைக்குக் காரணம் நடுவர் செய்த மிகப்பெரிய தவறே என்று கூறவேண்டும். இடைவேளைக்கு சற்று முன் ஸம்ப்ரோட்ட அடித்த ஷாட்டை தலையால் முட்டி இத்தாலி வீரர் லூகா டோனி கோலுக்குள் அடித்தார். ஆனால் அது ஆஃப் சைட் என்று தவறாக தீர்ப்பளித்தார் நடுவர். ஆனால் தொலைக்காட்சி ரீ-ப்ளேயில் ருமேனிய அணியின் கடைசி தடுப்பு வீரரை பந்து வருவதற்கு முன் டோனி கடக்க முயலவில்லை என்று தெரிந்தது. அது ஒரு முறையான கோல்தான்.

ஆட்டத்தின் 16வது நிமிடம் முதல் 19வது நிமிடம் வரை ருமேனியா இத்தாலிய கோல் பகுதியிலேயே இருந்தது. மூன்று முறை கோல் அடிக்க முயன்றும் ஒவ்வொரு முறையும் இத்தாலி கோல் கீப்பர் பஃபான் அதனை அபாரமான முறையில் தடுத்தார்.

அதேபோல் ருமேனியப் பகுதியில் இத்தாலியும் தொடர்ந்து 3 நிமிடங்கள் கோல் அடிக்க கடுமையாக முயன்றன. ஒரு முறை டோனி அடித்த ஷாட் கோல் போஸ்டை தாக்கியது. இரு முறை கோலுக்கு வெளியே சென்றது. ஆனால் டோனி அடித்த ஷாட் ஒன்று ஏறத்தாழ கோலுக்குள் செல்ல முயன்றபோது ருமேனிய கோல் கீப்பர் போக்தான் லொபோன்ட் அபாரமாக தடுத்து விட்டார்.

இடைவேளைக்குப் பிறகு கண் கொத்திப் பாம்பாய் பாதுகாத்து வந்த இத்தாலி கோல் கீப்பர் பஃபானையும் ஏமாற்றி அட்ரியன் மூட்டு ஒரு கோலை அடித்தார். ஆனால் உடனேயே இத்தாலியின் பனூச்சி கோல் அடித்து சமன் செய்தார்.

அனைத்தையும் விட முக்கிய தருணம் ஆட்டத்தின் 81-வது நிமிடம்தான். இதில் ருமேனிய அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை அட்ரியன் மூட்டு அடிக்க முடிவெடுக்கப்பட்டது. அட்ரியன் அடித்தார் பஃபான் சரியாக கணித்து அதனை தடுத்தார்.

நட்வர் பிழை காரணமாக இடைவேளைக்கு முன்னரே முன்னிலை பெற்று மனோவியல் ரீதியான பலம் பெற்று இத்தாலி அணி ஆட முடியாமல் போனது.

இப்போது பிரான்சுடன் விளையாடும் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்
பிரான்சை நொறுக்கியது ஹாலந்து!
பேட்மிண்டன்: இந்தியாவின் சைனா அரையிறுதியில்!
டென்னிஸ்: காலிறுதியில் ஃபெடரர்!
குவீன்ஸ் கிளப்: காலிறுதியில் நாடல், ரோடிக்!
யூரோ: ஆஸ்ட்ரியா - போலந்து ஆட்டம் டிரா!
குரேஷியாவிடம் ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி!