முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குவீன்ஸ் கிளப்: காலிறுதியில் நாடல், ரோடிக்!  Search similar articles
குவீன்ஸ் கிளப் ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ரஃபேல் நாடலும், அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

புல்தரையில் நடைபெறும் இந்த டென்னிஸ் தொடரில் நேற்று 3-வது சுற்றை மார்டி ஃபிஷ்சுடன் ஆடிய ரோடிக் 7- 5 என்று முதல் சுற்றில் முன்னிலை பெற்றிருந்தபோது மார்டி ஃபிஷ் காயம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் ரோடிக் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

முன்னதாக ரஃபேல் நாடல் ஜப்பான் இளம் டென்னிஸ் வீரர் கீய் நிஷிகோரியை வெல்ல கடும் பாடுபட வேண்டியதாயிற்று. இவர் 6- 4, 3- 6, 6- 3 என்ற செட்களில் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே லாட்வியா நாட்டு வீரர் குல்பீஸை 5- 7, 6- 1, 6- 4 என்று வீழ்த்தி காலிறுதியில் அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கை சந்திக்கிறார்.

செர்பிய முன்னணி வீரர் ஜோகோவிச் சக வீரர் டிப்சரேவிச்சை வீழ்த்‌தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ரிச்சர்ட் கேஸ்கே, ஆஸ்ட்ரேலிய வீரர் ஹூவிட் ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும்
யூரோ: ஆஸ்ட்ரியா - போலந்து ஆட்டம் டிரா!
குரேஷியாவிடம் ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி!
விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு மத்திய அரசு ரூ.678 கோடி உதவி!
ஒலிம்பிக் சுடருக்கு இடையூறு செய்யவேண்டாம்: தலாய் லாமா!
டென்னிஸ்: ஃபெடரர் 2-வது சுற்றில்!
பர்மிங்ஹாம் டென்னிஸ்: சானியா தோல்வி!