முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டென்னிஸ்: ஃபெடரர் 2-வது சுற்றில்!  Search similar articles
கெர்ரி வெபர் ஓபென் டென்னிஸ் ஒற்றையர் முதல் சுற்றில் சுவிஸ். வீரர் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் மைக்கேல் பெர்ரர் என்ற வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த டென்னிஸ் தொடர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் புல்தரை போட்டிகளுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

பிரெஞ்ச் ஓபன் இறுதியில் ரஃபேல் நாடலால் ஊதித்தள்ளப்பட்ட பிறகு தனக்கு சாதகமான புல்தரை களத்தில் ஃபெடரர் தன் முதல் வெற்றியை ஈட்டியுள்ளார்.

கெர்ரி வெபர் டென்னிஸ் தொடரின் கடந்த ஆண்டு சாம்பியனான தாமஸ் பெர்டிச் ஸ்வீடன் வீரர் சோடர்லிங்கிடம் 2-6, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி தழுவினார்.

ஜெர்மனி வீரர் பெஞ்சமின் பெக்கரை 4-6, 7-5, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த போட்டித் தொடரின் மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் பிலிப் கோல்ஷ்‌‌ரெய்பர், மற்றொரு ஜெர்மனி வீரர் ஆந்‌த்ரியாஸ் பெக் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மேலும்
பர்மிங்ஹாம் டென்னிஸ்: சானியா தோல்வி!
சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது துருக்கி!
ரொனால்டோ அபாரம்: காலிறுதியில் போர்ச்சுக்கல்!
சந்தோஷ் கோப்பை அரையிறுதியில் மேற்கு வங்கம்!
தமிழக நீச்சல் வீரர் அக்னீஸ்வர்க்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு: கருணாநிதி!
யூரோ 2008- ஸ்பெயின், ஸ்வீடன் அணிகள் வெற்றி!