யூரோ 2008 கால்பந்து போட்டித் தொடரில் போர்ச்சுக்கல் அணி செக் குடியரசு அணியை 3- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்று நடைபெற்ற பரபரப்பான பிரிவு ஏ போட்டியில் செக் குடியரசு அணியும் போர்ச்சுக்கல் அணியும் சளைக்காமல் அதிவேக கால்பந்தாட்டத்தை விளையாடினர். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இடைவேளைக்கு பிறகான நேரடி கோல் போர்ச்சுக்கல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. பிறகு ஆட்டத்தின் கடைசி தருணத்தில் மீண்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
ஏற்கனவே முதல் போட்டியில் துருக்கியை வென்றுள்ளதால், இந்த வெற்றி மூலம் பிரிவு ஏ-யில் 6 புள்ளிகளுடன் போர்ச்சுக்கல் அணி தன் காலிறுதித் தகுதியை உறுதி செய்துள்ளது. முதல் கோலை டீகோ அடித்து போர்ச்சுக்கல் அணிக்கு முன்னிலை கொடுத்தார்.
ஆனால் இந்த முன்னிலை அதிக நேரம் நீடிக்கவில்லை. செக் குடியரசு வீரர் ஜரோஸ்லாவ் பிளாசில் அடித்த கார்னர் ஷாட்டை செக். குடியரசின் உயரம் குறைவான வீரர் சியான்கோ பாய்ந்து தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார்.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு 62வது நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. செக். குடியரசு ஒரு வாய்ப்பை நழுவ விட்டது.
ஆனால் மறு முனையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு வந்த பாஸ் ஒன்றை கோலுக்குள் அடித்து முன்னிலை கொடுத்தார். பிறகு ஆட்டத்தின் இறுதிக் கணத்தில் மேலும் ஒரு கோலை ரொனால்டோ அடிக்க போர்ச்சுக்கல் அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.
|