லண்டனில் நடைபெற்றுவரும் செயின்ட் மேரிஸ் கிளாசிக் சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீரர் சுரேந்திர சிங் 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய தேச சாதனை படைத்துள்ளார்.
1992ஆம் ஆண்டு பஹதூர் பிரசாத் 3,000 மீட்டர் தூரத்தை 7 நிமிடம் 56.74 நொடிகளில் கடந்து செய்த சாதனையை, 7 நிமிடம் 50.31 நொடிகளில் கடந்து முறியடித்து சாதனை புரிந்துள்ளார் சுரேந்திர சிங்.
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க கடும் பயிற்சி செய்து வரும் தனக்கு இந்த சாதனை வெற்றி பெரும் ஊக்கமளித்துள்ளது என்று சுரேந்திர சிங் கூறினார்.
|