இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி இடது கால் கெண்டைத் தசை காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
செவ்வாயன்று நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டத்தின் போது காயம் தீவிரமடைந்தது.
சீன வீராங்கனை ஜீ ஸெங்குடன் கலப்பு இரட்டையர் போட்டிகளுக்காக ஜோடி சேர்ந்துள்ள மகேஷ் பூபதி இன்று அரையிறுதியில் ஸ்ரெபோட்னிக்- ஜிமோஞ்ஜி இணையை எதிர்கொள்ளவிருந்தார்.
காலிறுதியில் பூபதி-ஸெங் இணை பிரான்ஸ்-ஹாலந்து கலப்பு இரட்டையர் இணையை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.
|