மாநிலங்களுக்கு இடையேயான 48வது தடகள விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் இம்மாதம் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை இன்று அறிவித்த தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு, பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அணித் தேர்விற்கு முந்தைய, கடைசி தடகள போட்டித் தொடர் என்று தெரிவித்துள்ளது.
இந்திய தடகள கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் அஞ்சு பாபி ஜார்ஜ், கிருஷ்ண பூனியா, சுஷ்மிதா சிங் ராய், ரெஞ்சித், விகாஸ் கவுடா போன்ற முன்னணி தடகள வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச தரத்தில் நடத்தப்படும் இந்த தடகள போட்டிகள் அடுத்த காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்று தமிழ்நாடு தடகள கூட்டமைப்புத் தலைவர் தவராம் தெரிவித்துள்ளார்.
|