பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு இவானோவிச்சிற்கு அடுத்தபடியாக மற்றொரு செர்பிய வீராங்கனை ஜான்கோவிச் தகுதி பெற்றுள்ளார்.
ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரேஸ் நவாரோ என்ற அதிகம் அறியப்படாத வீராங்கனையை ஜான்கோவிச் 6- 3, 6- 2 என்ற நேர் செட்களில் 73 நிமிட ஆட்டத்தில் முறியடித்தார்.
அமேலி மௌரிஸ்மோவையும் பென்னெட்டாவையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நவாரோவின் திறமை நேற்று கைக் கொடுக்கவில்லை. அவருக்கு லாவகமான ஒரு கை பேக் ஹேண்ட் ஷாட் நேற்று சரிவர அமையாது போனது. இதனால் அடித்த ஷாட்கள் அனைத்தும் தவறாக முடிந்தது.
அரையிறுதியில் செர்பிய வீராங்கனைகளான இவானோவிச், ஜான்கோவிச் ஆகியோர் மோதுகின்றனர்.
|