முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜோகோவிச், நாடல் அரையிறுதியில்!  Search similar articles
ரோலாண்ட் கேரோஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடல் ஆ‌கியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

2-வது தரவரிசையில் உள்ள ஸ்பெயின் வீரர் நாடல் சக வீரரும் 19-வது தரவரிசையில் உள்ளவருமான நிகோலஸ் அல்மார்கோவை 6- 1, 6- 1, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

முதல் சர்வ்களை அல்மார்கோ சரியான முறையில் வீசவில்லை. மேலும் ஷாட்களை ஆடும்போது 36 முறை தவறுகள் செய்தார். இது அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் லாட்வியாவின் தரவரிசையில் இல்லாத எர்னெஸ்ட் குல்பிஸ் என்ற வீரரை 7- 5, 7- 6, 7- 5 என்ற செட்களில் சற்றே போராடி வீழ்த்தினார்.

19 வயது வீரரான லாட்வியாவின் குல்பிஸ் முதல் செட்டை 11 முறை பிரேக் பாயிண்டிலிருந்து தப்பித்தார். இருப்பினும் இறுதியில் ஜோகோவிச் ஒரு சர்வை முறியடித்து முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் துவக்கத்திலேயே ஜோகோவிச் பிரேக் பாயின்ட் கொடுத்து பின்னிலை வகித்தார் ஆனால் அதன் பிறகு ஆட்டத்தை சமன் முறிவிற்கு எடுத்துச் சென்றார். அதில் 7- 3 என்று ஜோகோவிச் வென்றார்.

3-வது செட்டில் 4- 2 என்று முன்னிலை வகித்த ஜோகோவிச், அடுத்தபடியாக தன் சர்வை தோற்றார். ஆனால் மீண்டும் குல்பிஸ் சர்வ் ஒன்றை முறியடித்து வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

அரையிறுதியில் ஜோகோவிச், நாடல் மோதுகின்றனர்.
மேலும்
ஒலிம்பிக்கில் இணைந்து விளையாட பூபதி-பயஸ் ஒப்புதல்!
ஃபிரஞ்ச் ஓபன் : அரையிறுதியில் இவானோவிச்!
பயஸ் – பூபதி இணைந்து ஆட சம்மதம்!
ஃபெடரர் காலிறுதியில்
ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி
100 மீ. ஓட்டம் : யுசைன் போல்ட் புதிய சாதனை!