ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் அரையிறுதிக்கு செர்பிய வீராங்கனை ஆனா இவானோவிச் (2) முன்னேறியுள்ளார்.
ரோலண்ட் காரோசில் இன்று நடந்த முதல் காலிறுதியில், சுவிட்சர்லாந்தின் பேட்டி ஸ்நைடரை 6-3, 6-2 என்ற நேர்செட்களில் இவானோவிச் தோற்கடித்தார்.
சற்றுமுன் நடந்து முடிந்த இரண்டு 4வது சுற்றுப் போட்டிகளில் ரஷ்யாவின் சுவட்லானா குஸ்நட்சோவா (4) 6-2, 6-3 என்ற செட்கள் கணக்கில் பெலாரஸின் விக்டோரியா அஜாரெங்காவையும், எஸ்டோனியாவின் காய்யா கனேபி 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் பெட்ரா கிவிட்டோவாவையும் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
|