ரோலான்ட் கேரோஸ்: பிரெஞ்ச் ஓபன் 4வது சுற்று ஆட்டத்தில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
தரவரிசை ஏதும் பெறாத பிரான்ஸ் வீரர் ஜூலியன் பென்னெட்டூ என்பவரை ஃபெடரர் 6- 4, 7- 5, 7- 5 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
2 மணி 26 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஃபெடரரின் பல ஆட்ட உத்திகளுக்கு பென்னெட்டூவிடம் பெரும்பாலும் பதில் இல்லை. இது ஒரு வழக்கமான ஃபெடரர் வெற்றிப் போட்டி. பெரிய அதிர்ச்சிகள் ஏதும் இல்லை.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் காயெல் மான்ஃபில்ஸ் 28ம் தரவரிசையில் உள்ள குரேஷிய வீரர் இவான் லூபிசிச்சை 7- 6, 4- 6, 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெர்ரர் செக் வீரர் ஸ்டெஃபானெக்கை வீழ்த்தியும், சிலி வீரர் கொன்ஸாலேஸ் அமெரிக்க வீரர் ராபி ஜின்பேரியை வீழ்த்தியும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
|