பிரான்சில் நடைபெறும் ஆம்பர் பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் அதிவேக செஸ் தொடரில் ஆர்மீனிய வீரர் ஆரோனியன் சாம்பியனாகிறார்!
விளாடிமிர் கிராம்னிக்குடன் 10வது சுற்று பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் அதிவேக செஸ் போட்டிகளில் டிரா செய்த ஆரோனியன் 13.5 புள்ளிகள் பெற்று தனித்த முன்னிலையில் உள்ளதால் சாம்பியன் பட்டத்தை வெல்கிறார்.
இவருக்கு அருகில் உள்ள டோபலோவ் 2.5 புள்ளிகள் குறைவாக அடுத்ததாக உள்ளார்.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாதன் ஆனந்த் தனது பிளைன்ட்ஃபோல்ட் ஆட்டத்தில் ஜெல்ஃபாண்டை வீழ்த்தினார். ஆனால் அதிவேக செஸ் ஆட்டத்தில் வீழ்ந்தார். இதனால் ஜெல்ஃபாண்டிற்கு புள்ளிகள் அளவில் முன்னெற்றம் கிடைத்தது.
இரண்டு செஸ் சுற்றுகளிலும் சேர்த்து ஆனந்த் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
இன்னமும் ஒரு சுற்று ஆட்டம் இருக்கையில் ஆரோனியன் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகியுள்ளது.
|