முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கால்பந்து: ஆஸி.யுடன் சீனா டிரா
சீனாவில் உள்ள குன்மிங்கில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணியுடன் சீனா கோல்கள் எதுவும் போடாமல் டிரா செய்தது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய கோல் கீப்பர் மார்க் ஷ்வார்சரின் அபார திறமையால் ஆஸ்ட்ரேலியா சீனாவிடம் தர்ம சங்கடமான தோல்வியை தவிர்த்தது.

இடைவேளைக்கு சற்று முன்னர் சீன வீரர் சன் சியாங் அடித்த ஃப்ரீ-கிக்கை கோலுக்குள் செல்லாமல் ஷ்வார்சர் தடுத்தார். இடைவேளைக்கு பிறகு மற்றொரு சீன வீரர் ஜூ டிங் தலையால் அடித்த பந்து ஆஸ்ட்ரேலிய கோல் கீப்பர் கைகளுக்கு நேராக சென்றது.

அதன் பிறகு உடனேயே சீன வீரர் அடித்த சக்தி வாய்ந்த ஷாட் ஒன்றை கோல் கீப்பர் மீண்டும் தடுத்தார். அதன் பிறகு கடைசி தருணத்தில் சீனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதையும் கோல்கீப்பர் ஷ்வார்சர் தடுத்து நிறுத்தினார்.

மற்றொரு தகுதி சுற்று ஆட்டம் தோஹாவில் நடைபெற்றது. இதில் இராக் அணியை கத்தார் அணி 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை தகுதி சுற்றில் முதல் வெற்றியை ஈட்டியது.
மேலும்
ஓலிம்பிக்: ஊக்க மருந்து புதிய சோதனை முறை நிராகரிப்பு!
கால்பந்து: ஜப்பான் அதிர்ச்சித் தோல்வி
கில் உருவபொம்மை எரிப்பு
ஆம்பர் செஸ்: ஆரோனியனிடம் ஆனந்த் தோல்வி!
டெ‌ன்‌னி‌ஸ் தரவ‌ரிசை: சா‌னியா மு‌ன்னே‌ற்ற‌ம்!
பசுபிக் லைஃப் : ஃபெடரர், நடால் தோற்றனர்!