பஹ்ரைனில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டியில் பஹ்ரைன் அணி ஜப்பானை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன் மூலம் இரண்டாம் பிரிவில் முதலிடம் வகிக்கிறது பஹ்ரைன். துவக்கம் முதலே ஜப்பான் கோல் கீப்பருக்கு பஹ்ரைன் வீரர் சையத் மொஹமத் பிரச்சனைகளை கொடுத்து வந்தார்.
இடையிடையே பஹ்ரைன் அணிக்கே கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஜப்பான் அதனை முறியடித்தது. ஆனால் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் பஹ்ரைன் வீரர் அப்டுல் லடீஃப் அடித்த லாங்-பாஸ் ஷாட்டை தலையால் முட்டி கோலாக மாற்றினார் ஆலா ஹுபைல்.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை ஜப்பான் தவற விட்டு அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
மற்றொரு 3ஆம் பிரிவு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் வடகொரியா அணி தென் கொரியா அணியுடன் 0- 0 என்று டிரா செய்தது. கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் தென் கொரியா நழுவவிட்டது. இதனால் வட கொரியா அணி இந்த டிரா மூலம் ஒரு புள்ளி பெற்றுள்ளது.
இதே பிரிவு மற்றொரு ஆட்டத்தில் ஜோர்டான் அணி துர்க்மேனிஸ்தான் அணியை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜோர்டான் அணி தனது முதல் ஆட்டத்தில் வட கொரியாவிடம் தோல்வியைத் தழுவியது.
|