இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறாததையடுத்து ஆத்திரம் அடைந்த இந்திய ஹாக்கி ரசிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ஹாக்கி கூட்டமைப்புத் தலைவர் கே.பி.எஸ். கில் உருவ பொம்மையை எரித்தனர்.
புது டெல்லியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தின் போது கில்லிற்கு எதிராக கோஷம் எழுப்பிய ரசிகர்கள் அவரது உருவபொம்மையை அடித்து உதைத்து பின்பு தீவைத்தனர்.
இந்திய ஹாக்கியின் சீரழிவை கூட்டமைப்பு எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தவில்லை, இதற்கு கில்தான் முழுப் பொறுப்பு என்று ரசிகர்கள் சங்க செயலர் அவதார் சிங் வெர்கா கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கில் தூக்கி எறியப்படவேண்டும். ஜோகிம் கார்வாலோவின் விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும், ஆஸ்ட்ரேலிய முன்னாள் வீரர் ரிக் சார்ல்ஸ்வொர்த்திடம் பொறுப்புகள் உடனடியாக ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.
2010 ஹாக்கி உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதையடுத்து அதற்குள் தற்போது கூட்டமைப்பில் உள்ள நிர்வாகிகள் தூக்கியெறியப்பட்டு புதிய குழு பதவியில் அமர்த்தப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
|