இண்டியன்வெல்ஸில் நடைபெற்று வரும் பசுபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் தோற்றனர்!
தரவரிசையில் இடம்பெறாத அமெரிக்க வீரர் மார்டி ஃபிஷ், இண்டியன்வெல்ஸ் காலிறுதியில் டேவிட் நல்பாண்டியனை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற அரையிறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரோஜர் ஃபெடரரை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெறும் 42 நிமிடங்களில் தோற்கடித்து இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் 2வது இடத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை, ஆஸ்ட்ரேலிய ஓபன் சாம்பியன் ஜோக்கோவிச் 6-3, 6-2 என்ற செட்கள் கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில், அனுபவமிக்க வீரர்களை அதிரடியாக வென்று முன்னேறியுள்ள மார்டி ஃபிஷ்ஷும், சிறப்பாக விளையாடி வரும் ஜோக்கோவிச்சும் மோதுகின்றனர்.
|