முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரையிறுதியில் சானியா இணை தோல்வி!
பசிபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அமெரிக்க இணையான சானியா மிர்சா-பெதானி மேட்டக் இணை சீன இணையிடம் தோல்வி தழுவியது.

யான் ஸீ-ஸெங் ஜீ இணையை எதிர்கொண்ட சானியா-மேட்டக் இணை முதல் செட்டை 7- 6 என்று கைப்பற்றியது. அதன் பிறகு இரண்டாவது செட்டில் 5- 7 என்றும், மூன்றாவது செட்டில் 4 - 10 என்றும் தோல்வி தழுவினர்.

மற்றொரு அரையிறுதியில் ஸ்லோவாகியாவின் டேனியலா ஹன்டுசோவா ஜப்பானின் ஐ சுஜியாமா இணை ரஷ்ய இணையான தினாரா சஃபினா-எலினா வெஸ்னினா இணையை 6- 3, 6- 4 என்ற செட்களில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தற்போது சீன இணையும் ஸ்லோவேகிய-ஜப்பான் இணையும் இரட்டையர் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
மேலும்
100மீ ஃப்ரீஸ்டைல்: அலைன் பெர்னார்ட் உலக சாதனை
பெடரர், மார்டி ஃபிஷ் அரையிறுதியில்
பசிபிக் லைஃப்: இறுதியில் குஸ்னெட்சோவா-இவானோவிச்
சொங்காவை வீழ்த்தி நாடல் காலிறுதியில்! சொங்காவை வீழ்த்தி நாடல் காலிறுதியில்!
ஷரபோவா-குஸ்னெட்ஸோவா அரையிறுதியில் மோதல்
பால்டனை வீழ்த்தி மான்செஸ்டர் முதலிடம்!