இண்டியன்வெல்ஸில் நடைபெறும் பசிபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் தொடர் ஆடவர் அரையிறுதிப் போட்டிகளுக்கு சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், மார்டி ஃபிஷ் ஆகியோர் தகுதி பெற்றனர்.
இண்டியன் வெல்ஸ் தொடரில் இதுவரை 4ஆவது சுற்றுக்கு மேல் சென்றிடாத மார்டி ஃபிஷ் அர்ஜென்டீன நட்சத்திரம் டேவிட் நல்பான்டியனை 6- 3, 6- 7, 7- 6 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் ஜெர்மனி வீரர் டாமி ஹாஸ் சைனஸ் தொந்தரவு காரணமாக ஆட்டத்தை கைவிட்டதால் ரோரஜ் பெடரர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில் மார்டி ஃபிஷ், ரோஜர் ஃபெடரரை சந்திக்கிறார். இதுவரை ஒருமுறை கூட பெடரரை இவர் வென்றதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடலும் 3ஆம் தரவரிசையில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.
|