முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பசிபிக் லைஃப்: இறுதியில் குஸ்னெட்சோவா-இவானோவிச்
இண்டியன் வெல்ஸில் நடைபெறும் பசிபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா, செர்பிய வீராங்கனை இவானோவிச் ஆகியோர் மோதுகின்றனர்.

இதன் மூலம் அரையிறுதிப் போட்டிகளில் மரியா ஷரபோவா, ஜெலெனா ஜான்கோவிச் ஆகியோர் தோல்வியை தழுவி வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா 6- 3, 5- 7, 6- 2 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை மரியா ஷரபோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து 18 போட்டிகளை வெற்றிபெற்றிருந்த ஷரபோவாவின் தொடர் வெற்றிக்கு குஸ்னெட்சோவா முற்றுப்புள்ளி வைத்தார்.

மற்றொரு அரையிறுதியில் செர்பிய விராங்கனைகளான ஆனா இவானோவிச்-ஜெலினா ஜான்கோவிச் விளையாடினர். இதில் 7- 6, 6- 3 என்ற செட் கணக்கில் இவானோவிச் தோல்வியை‌த் தழுவினார்.

ஷரபோவா சர்வ்களை போடுவதில் கடும் தடுமாற்றத்திற்குள்ளானார். மொத்தம் 8 முறை இரட்டைத் தவறுகளைச் செய்தார். இதனால் தோல்வியை தழுவ நேரிட்டது.
மேலும்
சொங்காவை வீழ்த்தி நாடல் காலிறுதியில்! சொங்காவை வீழ்த்தி நாடல் காலிறுதியில்!
ஷரபோவா-குஸ்னெட்ஸோவா அரையிறுதியில் மோதல்
பால்டனை வீழ்த்தி மான்செஸ்டர் முதலிடம்!
பசிபிக் லைஃப்: சானியா இணை அரையிறுதியில்!
லீகோவிடம் ஆனந்த் தோல்வி!
விளையாடத் தயார்-பெக்காம்