பசிபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 4ஆம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வில்ஃப்ரெட் சொங்காவை ரஃபேல் நாடல் 6- 7, 7- 6, 7- 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சொங்காவைற்கு எதிராக 4 பிரேக் பாயிண்டுகளை கைப்பாற்றிய நாடல், ஆஸ்ட்ரேலிய ஓபனில் சொங்காவிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளார். உலகத் தரவரிசையில் 17ஆம் இடத்தில் உள்ள சொங்கா 12 ஏஸ்களை அடித்தாலும், 7 முறை இரட்டைத் தவறுகளை செய்ததால் தோல்வி தழுவ நேரிட்டது.
மற்றொரு ஆட்டத்தில் இன்னொரு பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேயை அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக் 6- 4, 6- 2 என்ற செட்களில் வீழ்த்தினார்.
காலிறுதியில் நாடல்-பிளேக் மோதுகின்றனர்.
இவான் லுபிச்சை 6- 3, 6- 4 என்று வீழ்த்தி ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் ஜெர்மனியின் டாமி ஹாஸை காலிறுதியில் சந்திக்கிறார். டாமி ஹாஸ் 4ஆவது சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயை வீழ்த்தினார்.
கில்லர்மோ கனாஸை வீழ்த்திய ஆஸ்ட்ரேலிய ஓபன் சாம்பியன் ஜோகோவிச் செக். வீரர் ஸ்டானிஸ்லாஸ் வார்வின்காவை காலிறுதியில் சந்திக்கிறார்.
பசிபிக் லைஃப் ஓபன் பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் வந்த ஆஸ்ட்ரேலிய வீரர் லெய்டன் ஹூவிட் 5- 7, 6- 3, 6- 7 என்ற செட்கணக்கில் மார்டி ஃபிஷ்ஷிடம் தோல்வி தழுவினார்.
ஜுவான் கார்லோஸ் பெர்ரெரோவை வீழ்த்திய அர்ஜென்டீன வீரர் டேவிட் நல்பான்டியனை மார்டி ஃபிஷ் காலிறுதியில் சந்திக்கிறார்.
|