முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஷரபோவா-குஸ்னெட்ஸோவா அரையிறுதியில் மோதல்
பசிபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனைகளான மரியா ஷரபோவா, ஸ்வெட்லானா குஸ்னெட்ஸோவா ஆகியோர் மோதுகின்றனர்.

டேனியலா ஹன்டுசோவாவை 7- 6, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்திய மரியா ஷரபோவா தொடர்ந்து தனது 18ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.

முதல் செட்டில் 2- 5 என்று ஹன்டுசோவாவிடம் பின் தங்கியிருந்த ஷரபோவா அதன் பிறகு இரண்டு சர்வ்களை முறியடித்து 4- 5 என்று நெருங்கி வந்தார். பிறகு தனது சர்வை வெற்றி பெற்று சமன் முறிவு ஆட்டத்திலும் வெற்றி பெற்றார்.

பிறகு இரண்டாவது செட்டை 35 நிமிடங்களில் கைப்பற்றி போட்டியை வென்றார்.

2ஆம் தரவரிசையில் உள்ள ஸ்வெட்லானா குஸ்னெட்ஸொவா 10ஆம் தரவரிசை போலந்து வீராங்கனையான ராட்வான்ஸ்காவை 6- 2, 6- 4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
மேலும்
பால்டனை வீழ்த்தி மான்செஸ்டர் முதலிடம்!
பசிபிக் லைஃப்: சானியா இணை அரையிறுதியில்!
லீகோவிடம் ஆனந்த் தோல்வி!
விளையாடத் தயார்-பெக்காம்
பெடரர் முன்னேற்றம்: காலிறுதியில் ஷரபோவா!
பசுபிக் லைஃப் : சானியா தோல்வி