முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பசிபிக் லைஃப்: சானியா இணை அரையிறுதியில்!
இண்டியன்வெல்சில் நடைபெறும் பசிபிக் லைஃப் ஓபன் மகளிர் இரட்டையர் காலிறுதியில் இந்திய - அமெரிக்க இணையான சானியா மிர்சா - பெத்தானி மேட்டக் இணை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

சானியா-மேட்டக் இணைக்கு கடும் சவாலாக அமைந்த தய்பேய் இணையான யங் ஜேன் சங்-சியா ஜங் சுவாங் இணையை சானியா இணை 7- 5, 4- 6, 11- 9 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினர்.

மற்றொரு காலிறுதியில் செக்.- போலந்து இணையான பெனசோவா-ராட்வன்ஸ்கா இணையை சீன இரட்டையர் வீராங்கனைகளான சீ யாங் - ஜீ ஸெங் இணை 6- 0, 6- 4 என்ற செட் கணக்கில் சுலபமாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அரையிறுதியில் சானியா-மேட்டக் இணை சீன இரட்டையர் இணையை சந்திக்கின்றனர்.
மேலும்
லீகோவிடம் ஆனந்த் தோல்வி!
விளையாடத் தயார்-பெக்காம்
பெடரர் முன்னேற்றம்: காலிறுதியில் ஷரபோவா!
பசுபிக் லைஃப் : சானியா தோல்வி
செஸ் : ஆனந்த் தனித்த முன்னிலை!
ரஃபேல் நாடல், பிளேக் அடுத்த சுற்றில்