பிரான்சில் நடைபெறும் 17ஆவது மெலடி ஆம்பர் பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் அதிவேக செஸ் போட்டித் தொடரில் 5ஆவது சுற்று அதிவேக செஸ் போட்டியில் பீட்டர் லீகோவிடம் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி தழுவினார்.
அதிவேக செஸ் போட்டியில் லீகோவிடம் தோல்வியடையும் முன் நடந்த பிளைன்ட்ஃபோல்ட் போட்டியில் ஆனந்த் லீகோவுடன் டிரா செய்தார். இதன் மூலம் வெறும் அரைப்புள்ளிகள் மட்டுமே ஆனந்திற்கு கிடைத்தது. இதனால் தனித்த முன்னிலைப் பெற்றிருந்த ஆனந்த் தற்பொது பின்னடைவு கண்டுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் கிராம்னிக் பிளைன்ட்ஃபோல்ட் ஆட்டத்தில் அலெக்சாண்டர் மொரோசேவிச்சை வீழ்த்தி அவருடன் அதிவேக சேஸ் போட்டியில் டிரா செய்தார்.
தற்போது டோபலோவ், அரோனியன், இவான்சுக் ஆகியோர் இரண்டு போட்டிச் சுற்றுக்களிலும் சேர்த்து 5 புள்ளிகளுடன் முன்னிலை பெற ஆனந்த் 4.5 புள்ளிகள் பெற்று பின்னடைந்துள்ளார்.
|