முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விளையாடத் தயார்-பெக்காம்
மு‌ன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணித் தலைவர் டேவிட் பெக்காம், தன் உடல் நிலை தற்போது இங்கிலாந்து அணிக்காக விளையாடத் தயாராகிவிட்டது என்று பயிற்சியாளர் ஃபேபியோ கேப்பல்லோவிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி ஸ்டார் கிளப்பிற்கு ஆடி வரும் பெக்காம் வரும் வியாழக்கிழமை வரை தனது தேர்விற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

32 வயதான டேவிட் பெக்காம் கடந்த சனியன்று 90 நிமிடங்கள் தொடர்ச்சியாக விளையாடி தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.

அடுத்த வாரம் பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

இங்கிலாந்தின் புதிய பயிற்சியாளர் கேப்பல்லோ, டேவிட் பெக்காமிற்கு அவரது 100ஆவது கால்பந்தாட்ட போட்டியை கொடையாக வழங்க விரும்பவில்லை. திறமையையும், உடற்தகுதியையும் நிரூபிக்கவேண்டும் என்பதில் பயிற்சியாளர் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும்
பெடரர் முன்னேற்றம்: காலிறுதியில் ஷரபோவா!
பசுபிக் லைஃப் : சானியா தோல்வி
செஸ் : ஆனந்த் தனித்த முன்னிலை!
ரஃபேல் நாடல், பிளேக் அடுத்த சுற்றில்
பூபதி-நோயெல்ஸ் காலிறுதியில்
இந்திய மகளிர் ஹாக்கி அணித்தலைவர் மம்தா கார்ப்!