முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > சுவையான தகவல்கள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஐ.பி.எல்: 30 லட்சம் தந்தால் பாதுகாப்பு!
கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்றால் ரூ.25 - 30 லட்சம் கூடுதல் தொகை தாருங்கள் என்று கொல்கத்தா காவல்துறை அதிரடி கோரிக்கை வைத்துள்ளது.

ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை பெங்களூரில் தொடங்குகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி கொல்கத்தாவில் முதல் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 7 போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்காக போட்டி ஒன்றுக்கு 5,500 சீருடைக் காவலர்களும், சாதாரண உடைகளில் 1,500 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சாதாரணமாக காவலுக்கு நிறுத்தப்படும். காவலர்களை விட இது எண்ணிக்கையில் கூடுதலாகும்.

இது குறித்து கொல்கத்தா மாநகர காவல்துறை உதவி ஆணையர் கூறுகையில், கான்ஸ்டபிள் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.457; துணை ஆய்வாளருக்கு ரூ.671; ஆய்வாளருக்கு ரூ.822; இது தவிர உணவிற்காக ரூ.900 என்று கணக்கிட்டால் ரூ.25 முத 30 லட்சம் வரை தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் முழுதும் வணிக நோக்கத்தற்காகவும் பொழுது போக்கு நோக்கத்திற்காகவும் நடத்தப்படுவதால், சாதரணமாக செலவாகும் தொகையை காட்டிலும் 6 மடங்கு அதிகமாக கொல்கத்தா காவல்துறை கேட்டுள்ளது என்று கொல்கத்தா ஆட்ட அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த தொகையை ஆட்ட அமைப்பாளர்களான ரெட் சில்லீஸ் என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனமே கொடுக்க வேண்டும். கொல்கத்தா காவல்துறை ஏற்கனவே தங்களது இந்த கோரிக்கையை அமைப்பாளர்களுக்கு அனுப்பிவிட்டது.
மேலும்
பிரேசில் கிரிக்கெட் அணிக்கு இந்தியா பயிற்சி!
டிக்கி பேர்ட் அறக்கட்டளை மீது விசாரணை!
கவாஸ்கர், சச்சின் வரிசையில் திராவிட்
சேவாக் முச்சதம் - சில சுவையான தகவல்கள்