முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > சுவையான தகவல்கள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டிக்கி பேர்ட் அறக்கட்டளை மீது விசாரணை!
இங்கிலாந்தின் சிறந்த கிரிக்கெட் நடுவராக கருதப்படும் டிக்கிபேர்ட் வசதியில்லாத விளையாட்டு வீரர்களுக்கு பண உதவி அளிக்கும் நோக்கத்துடன் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கியிருந்தார். இதற்காக திரட்டப்பட்ட பணத்தில் மிகக்குறைந்த அளவே வசதியில்லாத விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டிக்கி பேர்ட் தனது 'டிக்கி பேர்ட் அறக்கட்டளை'-யை 2004ஆம் ஆண்டு துவங்கினார். இதற்காக திரட்டப்பட்ட 130,000 பவுண்டுகள் தொகையில் வெறும் 7907 பவுண்டுகள் தொகையே அறக்கட்டளை உதவி வகையில் செலவிடப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக் குழுவிடம் இந்த அறக்கட்டளை சமர்ப்பித்த கணக்கில் 7907 பவுண்டுகளே உண்மையான நோக்கத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திரட்டப்பட்ட தொகையில் 120,000 பவுண்டுகள் அறக்கட்டளை செலவுகள் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இதில் நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக 62,368 பவுண்டுகளும், ஆலோசகர்களுக்காக 13,500 பவுண்டுகளும், மார்க்கெட்டிங் செலவுகளாக 20,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அறக்கட்டளையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஒருவரிடமிருந்து 50,000 பவுண்டுகள் தொகையை மீட்கும் வேலையில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
கவாஸ்கர், சச்சின் வரிசையில் திராவிட்
சேவாக் முச்சதம் - சில சுவையான தகவல்கள்