சென்னையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் முதல் கிரிக்கெட் டெஸ்டில் ராகுல் திராவிட் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
சுனில் கவாஸ்கர் 125 போட்டிகளில் 10,122 ரன்களை எடுத்துள்ளார். சச்சின் 147 போட்டிகளில் 11,782 ரன்களை குவித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது ராகுல் திராவிட் 120ஆவது டெஸ்டில் 10,017 ரன்களை குவித்துள்ளார். சராசரி 55.65.
லாரா 131 டெஸ்ட்களில் 11,953 ரன்களை 52.88 என்ற சராசரியில் பெற்று முதலிடம் வகிக்கிறார். இரண்டாவதாக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். 3ஆவதாக ஆலன் பார்டர் 11,174 ரன்களுடன் உள்ளார். 4ஆவதாக ஸ்டீவ் வாஹ், 5ஆவது இடத்தில் சுனில் கவாஸ்கர். தற்போது 6வது இடத்தில் ராகுல் திராவிட். இவருக்குப் பின்னால் ரிக்கி பாண்டிங் 116 டெஸ்ட்களில் 9776 ரன்களுடன் உள்ளார்.
இவருக்குப் பிறகு ஜாக் காலீஸ் 117 டெஸ்ட்களில் 9490 ரன்களில் உள்ளார். இவருக்கு பிறகு தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் மேத்யூ ஹெய்டன் 8,242 ரன்களில் உள்ளார்.
|