முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > சுவையான தகவல்கள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சேவாக் முச்சதம் - சில சுவையான தகவல்கள்
sewag
webdunia photoWD
சென்னை டெஸ்டில் நேற்று சேவாக் அடித்த 309 ரன்களில் ஏகப்பட்ட டெஸ்ட் சாதனைகள் முறிவடைந்துள்ளன.

1. ஒரே நாளில் 250 ரன்களுக்கும் மேலாக ஒரு வீரர் ர‌ன் குவிப்பது என்பது கடந்த 50 ஆண்டுகளில் நேற்றுதான் நடந்துள்ளது.

2. இந்திய மண்ணில் அதிகபட்ச தனி நபர் டெஸ்ட் ரன் எண்ணிக்கையான லக்ஷ்மண், ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக எடுத்த 281 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

3. 278 பந்துகளில் 300 ரன்களை எட்டியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக முச்சதம் இதுவாகவே அமைந்துள்ளது.

4. உலகின் இரண்டு தலை சீறந்த வீரர்களான டான் பிராட்மேன், பிரையன் லாரா ஆகியோர் வரிசையில் இரண்டு முச்சதங்களை எடுத்த 3ஆவது வீரர் விரேந்திர சேவாக்.

5. ஒரே நாளில் நேற்று சேவாக் எடுத்த 257 ரன்கள் என்ற சாதனையும் டான் பிராட்மேனுடன் ஒப்பு நோக்கத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்சில் 1930 ஆம் ஆண்டு ஒரே நாளில் 309 ரன்களை ‌பிரா‌ட்மே‌ன் விளாசினார்.

6. முதல் விக்கெட்டுக்காக 213 ரன்களையும், பிறகு இரண்டாவது விக்கெட்டுக்காக ராகுல் திராவிடுடன் இணைந்து 268 ரன்களை சேர்த்ததும் சாதனையே. ஆம்! முதல் இரண்டு விக்கெட்டுகளுக்காக இரண்டு இரட்டை சத பார்ட்னர்ஷிப்புகள் நடைபெறுவது இதுவே முதல் முறை.

7. சேவாக் கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 150ற்கும் மேலாக ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இதில் 2 முச்சதங்களும், 2 இரட்டை சதங்களும் அடங்கும்.

8. நேற்றைய ஆட்ட ஸ்கோரான 468/1- சேவாக் மட்டும் 309 ரன்கள் எடுத்திருப்பது ஒரு அணியின் ஸ்கோரில் அதிகபட்ச பங்களிப்பிற்கான சாதனையாகும்.

9. சேவாக் சதம் எடுக்கும்போதெல்லாம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 77.79ஆக உள்ளது. சதம் எடுக்கும்போதெல்லாம் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் மற்றொரு வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்.

10. நேற்று மார்ச் 28ஆம் தேதி 309 ரன்களைக் குவித்தார் சேவாக், 2004ல் மார்ச் 28ஆம் தேதி முல்டானில் பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் எடுத்தார் சேவாக். எனவே மார்ச் 28 அவருக்கு மறக்க முடியாத ஒரு தினம் என்பது குறிப்பிடத் தக்கது.