ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் சச்சின் 175 ரன்கள் விளாசியது, சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆகக் கருதப்படும் என முன்னாள் வீரரும், வீரர்கள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 ஆயிரம் ரன்களைக் கடப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், நடுவரின் தவறான முடிவால் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.