கடைசி 5 ஓவர்கள் 63; இலங்கை 274 ரன்கள் குவிப்பு

சனி, 2 ஏப்ரல் 2011 (18:54 IST)

PTI Photo
FILE
மும்பையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வுக்கு எதிராக இலங்கை கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் குவித்து 211 ரன்களிலிருந்து 274 ரன்கள் சென்றனர். மகேலா ஜெயவதனே 103 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

45-வது ஓவருக்கு முன்பு அடுத்தடுத்து சமரவீராவையும், கபுகேதராவையும் இழந்த இலங்கை ஜெயவர்தனேயை நம்பியிருந்து. ஆனால் நுவான் குலசேகரா களமிறங்கி அவரும் மகேலாவும் 8 ஓவர்களில் 66 ரன்களைச் சேர்த்தனர்.

211 ரன்களை எடுத்த நிலையில் பேட்டிங் பவர் பிளே 46-வது ஓவரில் எடுக்கப்பட்டது. இதில் முதல் ஜாகீர் 13 ரன்களைக் கொடுக்க முனாஃப் படேல் 11 ரன்களைக் கொடுத்தார். அடுத்த ஜாகீர் ஓவரில் ஒரு அபார சிக்சர் உட்பட 17 ரன்கள் குவிக்கப்பட்டது. அதில் ஜாகீர்ன் ஒரு பந்தை கவர் திசையில் தூக்கி அடித்த மகேலா 85 பந்துகளில் சதம் எடுத்து உலகக் கோப்பை இறுதியில் சதம் எடுத்த இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை எட்டினார்.

கடைசி ஓவரின் கடைசி பந்தை திசரா பெரேரா ஜாகீர் கான் பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்சர் அடிக்க இலங்கை 274 ரன்களைக் குவித்தது.

முன்னதாக இலங்கை அணி இருவருக்கிடையிலான பார்ட்னர்ஷிப்களை நன்றாக உருவாக்கியது.

தில்ஷான், சங்கக்காரா இடையே 43 ரன்கள், சங்கக்காரா ஜெயவர்தனே இடையே 62 ரன்கள் சமரவீரா, ஜெயவர்தனே இடையே 57 ரன்கள், ஜெயவர்தனே, குலசேகரா இடையே 8 ஓவர்களில் 66 ரன்கள் என்று ஆடியது கை கொடுத்தது. கடைசியில் திசரா பெரேரா 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

முன்னதாக சங்கக்காரா 48 ரன்கள் எடுத்து யுவ்ராஜிடம் ஆட்டமிழந்தார். குலசேகரா 32 ரன்களை எடுத்தார். சமரவீரா 21 ரன்களையுமஎடுத்தனர். முதல் 5 ஓவர்களில் 3 மைடன்களுடன் 6 ரன்கள் கொடுத்த ஜாகீர் கான் கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தார். ஆனால் ஜெயவர்தனேயும், குலசேகராவும் எந்த விதமான காட்டுத்தனமான அடியையும் அடிக்கவில்லை அனைத்தும் கிரிக்கெட் ஷாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முனாஃப் படேல் முதல் 6 ஓவர்களில் 18 ரன்களைக்கொடுத்து கடைசி 3 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஜெயவர்தனே ஒரு முனையில் எளிதான ரன்களை எடுத்தார். அதனை தோனி கட்டுப்படுத்த முயலவில்லை. மேலும் அவர் விக்கெட்டை வீழ்த்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அபாரமான இன்னிங்ஸ்.

இந்தியா களமிறங்கவுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

கிரிக்கெட்

ஸ்ட்ராஸ் 96, இங்கிலாந்து 218/2

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 96 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, ...

கபில் தேவ் முடிவு செய்ய வேண்டும் : கிரிக்கெட் வாரியம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேச கிரிக்கெட் கழகத்தின் தலைவராக நீடிப்பதா? ...

இங்கிலாந்து அதிரடி 62/0 (12)

அலாஸ்டர் குக்கின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் ஏதும் இழப்பின்றி 12 ஓவர்களில் 62 ரன்களை ...

லார்ட்ஸ் டெஸ்ட் : இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு லார்ட்ஸில் துவங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பூவா - ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine
Widgets Magazine