தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாளான இன்று நியூஸீலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 5 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பந்து வீச்சிற்கு சாதகமற்ற இந்தப் பிட்சில் தென் ஆப்பிரிக்காவின் வளரும் நட்சத்திரம் வெர்னன் பிலாண்டர் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை அதிகபட்சம் கைப்பற்றினார்.
முன்னதாக இன்று காலை 191/7 என்று துவங்கிய தென் ஆப்பிரிக்கா 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
46 ரன்களில் இருந்த ஜாக் ருடால்ப் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 4 ரன்களில் இருந்த பிலாண்டர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசீலாந்து தரப்பில் கிறிஸ் மார்டின் 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.
பிரெண்டன் மெக்கல்லம் (48), ராஸ் டெய்லர் (44) ஆகியோர் சிறப்பாக ஆடி கடைசியில் மோசமான ஷாட்டிற்கு வீழ்ந்தனர்.
டேனியல் வெட்டோரி 46 ரன்களையும் வான் விக் 36 ரன்களையும் எடுத்தனர். பிரேஸ்வெல் 25 ரன்கள் எடுத்ததால் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 5 ரன்கள் முன்னிலை பெற்றது நியூஸீலாந்து.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிலாண்டர் 4 விக்கெட்டுகளையும், மோர்னி மோர்கெல் 2 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெய்ன் மற்றும் லெக் ஸ்பின்னர் இம்ரான் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.