ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 31 ரன்னில் தோல்வி அடைந்தது. அணியில் ஆல்ரவுண்டர் இர்பான் பத்தானைச் சேர்த்திருக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த தோல்வி குறித்து கவாஸ்கர் கூறியதாவது:-
20 ஓவர் போட்டிக்கு இர்பான் பத்தான் பொருத்தமான ஆல்ரவுண்டர் வரிசையில் அவர் இருந்துள்ளார். அவரை 11 பேர் கொண்ட அணியில் சேர்த்து இருக்க வேண்டும் அணி நிர்வாகம் இது குறித்து கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை ஆல்ரவுண்டராக இருப்பவர் தேவை இர்பான் பத்தான் இதை பலமுறை நிரூபித்து இருக்கிறார். கேப்டன் என்ற முறையில் தோனியின் பங்களிப்பு நன்றாக இருந்தது.