என்.கே.பி.சால்வே சாலஞ்சர் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா ரெட், இந்தியா கிரீன் அணிகள் மோதின இரு அணிகளும் 238 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் பரபரப்பான முறையில் சமன் ஆனது.
பரப்பான கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை இந்தியா ரெட் அணியின் பியூஷ் சாவ்லா அபாரமாக ஆடி வந்தார். இவர் சமத் ஃபல்லா வீசிய அந்த கடைசி ஓவரில் முதல் 5 பந்துகளில் 16 ரன்களை விளாசினார்.
ஆனால் கடைசி பந்தை ஃபல்லா வைடாக வீசினார் இதற்கு ஓடாமல் இருந்திருக்கலாம் ஆனால் சாவ்லா ஓட பந்தை விக்கெட் கீப்பர் கவுதம் ரன் அவுட் செய்தார் ஆட்டம் முடிந்து விட்டது.
முதலில் பேட் செய்த இந்தியா கிரீன் அணி 238 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா ரெட் அணி 238 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
7ஆம் வரிசையில் களமிறங்கிய சாவ்லா பின்கள வீரர்களை வைத்துக் கொண்டு 92 ரன்களை விளாசி வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்தார் கடைசியில் சாவ்லா கண்ணீர் விட்டார். இந்தியா கிரீன் அணி கேப்டன் ஹர்பஜன் அவரைத் தேற்றினார்.
சாவ்லாவின் அதிரடிக்கு முன் ரெட் அணி 102/5 என்று திணறியது. கம்பீர் இல்லாததால் ஷிகார் தவான் முதலில் வெளியேறினார். பிறகு ராயுடுவும், முகுந்தும் விறுவிறு 41 ரன்களைச் சேர்த்தனர். பிறகு ஹர்பஜனும், இக்பால் அப்துல்லாவும் பந்து வீச வந்தனர்.
முதலில் முகுந்த், ஹர்பஜன் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். பிறகு ராயுடு, அசோக் மெனாரியா விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சாய்த்தார். அதிரடி மன்னன் யூசுப் பத்தானை ஷாட் பிட்ச் பந்து மூலம் அதிர்ச்சியடையச் செய்து வீழ்த்தினார் அபிமன்யு மிதுன். ரித்திமான் சஹாவை அப்துல்லா வீழ்த்த, சாவ்லா களமிறங்கினார்.
முன்னதாக இந்தியா கிரீன் அணியில் அனிருதா 39 ரன்களையும் கயீப் 41 ரன்கலையும், கேப்டன் ஹர்பஜன் 49 ரன்களையும் எடுத்தனர்.
இந்தியா ரெட் அணியில் மிதும் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.