கிரிக்கெட் செய்தி: இலங்கை விக்கெட்டுகள் சரிவு 76/5

வியாழன், 8 செப்டம்பர் 2011 (12:33 IST)

பல்லிகெலி மைதானத்தில் இன்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வுக்கு எதிராக முதல் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

துவக்கத்திலேயே க்கு பின்னடைவு ஏற்பட்டது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன்னா ஹெராத் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக செகுகே பிரசன்னா என்றை லெக் ஸ்பின்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற தில்ஷான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். 3வது ஓவரில் ரயான் ஹேரிஸ் வீசிய வெளியே சென்ற பந்தை மிகவும் தளர்ச்சியான ஒரு ஷாட்டை அடித்து விக்கெட் கீப்பர் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து துவக்க வீரர் பரனவிதனா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

சரியாக 3 ஓவர்களுக்குப் பிறகு இளம் வேகப்பந்து வீச்சாளர் கோப்லேண்ட் வீசிய அபாரமான இன்ஸ்விங்கர் ஆஃப் ஸ்டம்பைத் தாக்காது என்று தில்ஷான் ஆடாமல் விட்டு விட பந்து நன்றாக இன்ஸ்விங் ஆகி ஸ்டம்ப்களைத் தாக்கியது. தில்ஷான் 4 ரன்களில் அவுட்.

கடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமான ஜெயவர்தனே சதம் எடுத்தார் ஆனால் இந்த முறை அவர் 4 ரன்கள் எடுத்திருந்தபோது கோப்லேண்ட் வீசிய ஆஃப் ஸ்டம்ப் குட் லெந்த் பந்தை ஒரு சுழற்று சுழற்றினார் பந்து டீப் தேர்ட்மேன் திசையில் காற்றில் எழும்பியது. மைக் ஹஸ்ஸி காற்றில் பாய்ந்து இடது கையில் அபாரமாக பிடித்தார்.

சங்கக்காராவும், சமரவீராவும் இணைந்து 43 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 17 ரன்கள் எடுத்த சமரவீரா ஹேரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசியாக ஒரே ஓவரில் ஸ்பின்னர் லயான் ஓவரில் ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்த பிரசன்ன ஜெயவர்தனே 18 ரன்கள் எடுத்திருந்தபோது அதே ஓவரில் மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப்பை ஆட முயன்று ஃபைன்லெக் திசையில் ஹேரிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தற்போது சங்கக்காரா 29 ரன்களுடனும் மேத்யூஸ் 0 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்ட்ரேலிய தரப்பில் ஹேரிஸ், கோப்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் லயான் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

கிரிக்கெட்

இங்கிலாந்து சென்றது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றது

இந்தியா - பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி ரத்து!

தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை முழுமையாக அகற்ற ...

இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் மழையால் தாமதம்!

கிளாஸ்கோவில் இன்று நடைபெற வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் ...

இந்தியா தொடரை வென்றது

இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை யுவராஜ் சிங்கின் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine
Widgets Magazine