கா‌ல்லே டெ‌ஸ்‌ட்- 125 ர‌ன்‌ ‌‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் இல‌ங்கை ‌வீ‌ழ்‌‌த்‌தியது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா

சனி, 3 செப்டம்பர் 2011 (15:48 IST)

கா‌ல்லே‌வி‌ல் நட‌ந்த முத‌ல் டெ‌ஸ்‌‌ட் போ‌ட்டி‌யி‌ல் இல‌ங்கை அ‌ணியை 125 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌‌ஸ்‌‌ட்ரே‌லியா ‌‌வீ‌‌ழ்‌த்‌தியது.

முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்‌ட்ரேலியா 273 ரன்களும், இலங்கை 105 ரன்களும் எடுத்தன. பின்னர் 168 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்‌ட்ரேலிய அணி 2வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. ஆஸ்ட‌்ரேலிய அணி உணவு இடைவேளைக்கு பிறகு 2வது இன்னிங்சில் 59.2 ஓவர்களில் 210 ரன்னுக்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌மஇழ‌ந்தது. இலங்கை அணி தரப்பில் ஹெராத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் க்கு 379 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

பரனவிதனா (0), தி‌‌ல்சான் (12), சங்கக்கரா (17), சமரவீரா (0), பிரசன்ன ஜெயவர்த்தனே (0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். மஹேலா ஜெயவர்த்தனே 57 ரன்னுடனும், மேத்யூஸ் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

4வது நாள் ஆட்ட‌த்தை தொட‌ர்‌ந்த இல‌ங்கை ‌அ‌‌ணி அபாரமாக ‌விளையாடி வ‌ந்தது. ந‌ன்றாக ‌விளையாடி வ‌ந்த ஜெயவ‌ர்‌த்தனே சத‌ம் எடு‌த்தா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து 5 ர‌ன் சே‌ர்‌ப்பத‌ற்கு‌ள் தனது ‌வி‌க்கெ‌ட்டை ப‌றிகொடு‌த்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌அ‌ணி‌யி‌ன் தோ‌ல்‌வியை த‌வி‌ர்‌‌க்க மே‌த்யூ‌ஸ் போராடினா‌ர். ஆனா‌ல் அவரு‌க்கு துணையாக எ‌ந்த ‌வீர‌ர்களு‌ம் ‌நிலை‌த்து ‌நி‌ற்க‌வி‌ல்லை. ச‌த‌ம் அடி‌ப்பா‌‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் 95 ர‌ன்‌னில‌் ஆ‌ட்‌ட‌ம் இழ‌ந்தா‌ர் மே‌த்யூ‌ஸ். இதையடு‌த்து இல‌ங்கை அ‌ணி 253 ர‌ன்னு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் இழ‌ந்தது. இதனா‌ல் 125 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி வெ‌ற்‌றி பெ‌ற்றது.

3 போ‌‌ட்டிக‌ள் கொ‌ண்ட டெ‌ஸ்‌ட் தொடரை 1-0 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் த‌ற்போது ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா அ‌ணி மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது.

இர‌ண்டு இ‌ன்‌னி‌ங்‌சி‌லு‌‌ம் சே‌‌ர்‌ந்து 110 ர‌ன் எடு‌த்த ஹ‌ஸ்‌ஸி ஆ‌ட்ட நாயகனாக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

கிரிக்கெட்

இங்கிலாந்து சென்றது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றது

இந்தியா - பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி ரத்து!

தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை முழுமையாக அகற்ற ...

இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் மழையால் தாமதம்!

கிளாஸ்கோவில் இன்று நடைபெற வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் ...

இந்தியா தொடரை வென்றது

இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை யுவராஜ் சிங்கின் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine
Widgets Magazine