கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | உலக‌க்கோ‌ப்பை 2011 | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » கம்பீர் பேட்டிங் செய்வார் - அணி மேலாளர்
ஃபீல்டிங் செய்யும் போது 4ஆம் நாள் காயம் பட்ட இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர் காயம் தீவிரமானது இல்லை என்றும் அதனால் அவர் இன்று களமிறங்குவார் என்றும் இந்திய கிரிக்கெட் அணி மேலாளர் அனிரூத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

"அது அடி பட்ட தாக்கத்தினால் ஏற்பட்ட காயம், அவருக்கு எக்ஸ் ரே எடுக்கபட்டது அதில் எலும்பு முறிவு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது காயத்தின் மீது ஐஸ் கட்டி வைத்து வருகிறார், திங்களன்று பேட்டிங் செய்ய தகுதி பெறுவார்" என்றார் அவர்.

பார்வர்ட் ஷாட் லெக்கில் ஃபீல்டிங் செய்த கம்பீர், ஹர்பஜன் வீசிய மோசமான பந்துக்கு பிரையர் ஷாட்டின் மூலம் முழங்கையில் அடிபட்டுக் கொண்டார்.

வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு முதல் நாள் ஃபீல்டிங்கில் களமிறங்காத சச்சின் டெண்டுல்கர் இன்று களமிறங்குவார். ஆனால் 98 நிமிடங்கள் கழித்தோ அல்லது அவர் 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகோ களமிறங்குவார். அதாவது எது முன்னதாக நிகழ்கிறதோ அதன் படி அவர் வருகை அமையும்.

ஆனாலும் இரண்டாவது டெஸ்டிற்குள் ஜாகீர் கான் தேறுவார் என்பது உறுதியாகவில்லை.
மேலும் படிக்க
இதையும் தேடு: கவுதம் கம்பீர், கிரிக்கெட்