கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » இரட்டை சதத்தை நோக்கி கம்பீர்: இந்தியா-361/1
Feedback Print Bookmark and Share
 
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் கௌதம் கம்பீர் இரட்டை சதத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய திராவிட அரை சதம் பூர்த்தி செய்துள்ளார்.

கான்பூரில் நடந்து வரும் இப்போட்டியில், முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி 71வது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்துள்ளது. கௌதம் கம்பீர் 164 ரன்கள், திராவிட் 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

முன்னதாக, துவக்க வீரர் சேவாக் அதிரடியாக விளையாடி தனது 16வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். எனினும், 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளிதரன் பந்தில், தில்ஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்